» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி போட்டி
வியாழன் 11, ஜூலை 2024 10:06:26 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இடையான கபடி போட்டிகள் நடைபெற்றது.
போட்டியினை தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மற்றும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்து கொண்ட அணி வீரர்களையும், பயிற்சியாளர்களையும், பார்வையாளர்களையும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.
போட்டியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி அணி வீரர்களும், மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணி வீரர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் பணியாற்றினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் கபடி அணி பயிற்சியாளர் தீபன் மற்றும் பிற ஆசிரியர்கள் செய்திருந்தனர். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களையும் போட்டிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
