» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிரகாசபுரம் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:47:44 AM (IST)நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜபுஷ்பம் செல்வராஜ், ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. 

சேகரத்தலைவர் நவராஜ் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை பிரீடா நவராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், தலைமை ஆசிரியர்கள் தர்மசீலிசாந்தி, விஜிலா காருண்யா, மோட்சம் அருள்சீலி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ_ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 

இதையடுத்து பணி நிறைவு பெறும் ஆசிரியை ராஜபுஷ்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார். ஆசிரியை ராஜபுஷ்பம் ஏற்புரை வழங்கினார். ‌இதில் சபை ஊழியர் ஸ்டான்லி மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஷர்லின் ஸ்வாட்ஸ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory