» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் பாராட்டுவிழா

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:02:19 AM (IST)தூத்துக்குடி 3-ம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது.

சக்தி வித்யாலயாவில் நடந்த பாராட்டு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் ஆசிரியை நளினிமாலா வரவேற்று பேசினார். பள்ளியின் ஆண்டறிக்கையை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா வாசித்தார். ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தேவார பேராசிரியை சாந்திரவிபாலன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவ, மாணவியர்களின் நடனம், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், மாறுவேடமணிந்து உரையாற்றுதல், திருக்குறள் ஒப்புவித்தல், மற்ற மாணவ மாணவியர்களின் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு என பல சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலைநிகழ்ச்சியின் நிறைவில் ஹிந்தி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், தண்ணீரின் முக்கியத்துவம், அதனை பயன்படுத்தும் முறையை பற்றி பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் மேலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவ மாணவிகளுக்கு கீரிடம் சூட்டி பாராட்டி பரிசிகளை பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் வழங்கினார்.நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை கௌரி அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

Prithvi Old student of this schoolApr 8, 2024 - 04:33:14 PM | Posted IP 172.7*****

Nice to see the KIDS are getting Appreciated..Hats off to the school and Good Teaching..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory