» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பள்ளி சார்பில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

வியாழன் 28, மார்ச் 2024 12:14:04 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பினை வலியுறுத்தி நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆழ்வார் திருநகரி வருவாய் ஆய்வாளர் மகாதேவன் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் மற்றும் நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, தபால் நிலையம், கூட்டுறவு வங்கி, நாசரேத் முக்கிய தெருக்கள், ரயில் நிலையம், கிராம நிர்வாக அலுவலக பகுதி, மோசஸ் தெரு, பேராலய தெரு ஆகியவற்றில் நடைபெற்றது. பேரணியில் பள்ளியின் இளையோர் செஞ்சிலுவை இயக்கம், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு படை பிரிவு மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வாக்காளர்களின் கடமை, வாக்களிப்பதின் அவசியம், முதன்முறை வாக்களிக்க கூடிய இளம் வாக்காளர்களின் பொறுப்பு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள், வாக்களித்து உறுதிப்படுத்துங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு மாணவர்கள் பேரணியாக சென்றனர். 

நாசரேத் நகர காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேரணிக்கான ஏற்பாடுகளை வாக்காளர் மைய பொறுப்பாளர் தனபால் செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் ஆசிரியர்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன் பாபு, எட்வின், ஜென்னிங்ஸ் காமராஜ், அலெக்சன் கிரிஸ்டோபர், கிராம உதவியாளர்கள் கண்ணன் மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory