» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:13:58 PM (IST)திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில், கல்வி, விளையாட்டு, நன்னெறி சார்ந்த நிகழ்வுகள், தற்கா ப்பு கலை மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு மாணவர்க ளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, திற னாய்வு தேர்வுகளில் பங் கேற்பதற்கு மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப் பட்டன. பயிற்சி பெற்று, திறனாய்வு தேர்வில் பங்கு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக் எப்ராயிம், முத்து ராஜேஷ் மற்றும் ஸ்ரீராம் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். 

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) குருநாதன், தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு தமிழக அரசின் கல்வி உத வித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், ஆசிரி யைகளையும் பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory