» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி

புதன் 21, பிப்ரவரி 2024 4:53:11 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளர்ப்புத் துறையில் "பெண்களின் வாழ்வதரத்தை மேம்படுத்த நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” பற்றிய 2 நாள் பயிற்சி 20.02.2024 முதல் 21.02.2024 வரை நடைபெற்றது. இப்பயிற்சியானது அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி துறையால "உயர்தர அலங்கார மீன்கள் உற்பத்தியின் மூலம்அலங்கார மீன் வளர்ப்பில் பெண்களின் வாழ்வதார மேம்பாடு” என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

இதில் தூத்துக்குடிமாவட்டத்தை சார்ந்த 21பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சியில் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த விளக்கப்பாடங்களும், செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. முக்கிய அலங்கார மீன்கள்இஅவற்றின் இனப்பெருக்கம்இ நீர்தரப் பராமரிப்பு, உயிர் உணவுகள், பொருளாதாரம், நோய்கள் மற்றும் குணப்படுத்தும் முறைகள, அலங்கார மீன்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் வழிகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. 

கீரனூரில் உள்ள அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடி இப்பயிற்சியின் வாயிலாக புதிய அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளை மேற்கொண்டு அதன்மூலம் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்று ஊக்குவித்தார். மீன்வளர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் சா. ஜுடித் பெட்ஸி இப்பயிற்சியை ஒருங்கிணைத்து விரிவாக நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory