» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாநில அளவிலான சிலம்பம், சுருள்வாள் போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மாணவர்கள் சிறப்பிடம்!
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:02:39 PM (IST)
மாநில அளவிலான சிலம்பம் மற்றும் சுருள்வாள் போட்டிகளில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.
மாநில அளவிலான சிலம்பம் , சுருள்வாள் மற்றும் கராத்தே போட்டிகள் சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்பார்ட்டன்ஸ் கழகத்தினரும், சாயர்புரம் போப் கல்லூரியும் இணைந்து போட்டிகளை நடத்தினர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ரோகித், தொடுமுறை சிலம்பப் போட்டியில் முதலிடமும், சுருள்வாள் வீசுவதில் முத லிடமும் பெற்றார்.13 வய துக்குட்பட்டோர் பிரிவில், 9-ஆம் வகுப்பு மாணவர் தருண்சன், ஒற்றைச் சிலம்பம் போட்டியில் முதலிடமும், தொடுமுறை போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்தார்.
12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவர் கார்த்தி கிருஷ்ணா தொடுமுறை சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.