» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்

புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)நாசரேத் பொறியியல் கல்லூரியில் மாணவ,மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. 

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் மாணவ_மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் இளம் முதல் முறை வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பேச்சிமுத்து தலைமை வகித்து வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான அவசியத்தை குறித்து எடுத்துரைத்தார்.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார்.

முகாமில் சுமார் 150 மாணவ_ மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தத்தோடு 40 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இதில் துணை தாசில்தார் முத்துலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் மகாதேவன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தாமரைகண்ணன், முத்து மாலை, முத்துராஜ் மற்றும் ஜேம்ஸ்,உதவியாளர் ராஜ்மனோ மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜிம்ரீவ்ஸ், ஷீபாதங்கபுஷ்பம், உதவியாளர் விக்டர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory