» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .

சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் சாத்தான்குளம்   புலமாடன் மேல்நிலைப்பள்ளி மாணவன் 3ஆம் இடம் பிடித்தார். 

70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில்  கட்டுரைப் போட்டி  தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றது. இதில்  மாவட்ட அளவில் பல்வேறு பள்¢ளிகள் கலந்து கொண்டனர. .இப்போட்டியில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி  புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல் சேர்மன்  தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். 

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில்  தூத்துக்குடி மாவட்ட    ஆட்சியர்  லட்சுமிபதி, தமிழக  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் முன்னிலையில்  தூததுக்குடி  மக்களவை  உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, மாணவனுக்கு   கேடயமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவனை பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவ,மாணவிகள்  பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory