» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி _நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறை மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தார். திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறை இயக்குனர் ஜாண் சாமுவேல் மரக்கன்று நட்டு நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் மொத்தம் 25 மரக்கன்று கள் நடப்பட்டன. 

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் , பர்சார் தனபால், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory