» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாலமோன் மேல்நிலைப் பள்ளியில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்!

சனி 11, நவம்பர் 2023 4:16:57 PM (IST)நாசரேத் சாலமோன் மேல்நிலைப் பள்ளியில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. அவைத்தலைவர் கருத்தையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் அதிசயமணி மற்றும் நகர இளைஞரணி அமைப்பாளர் லிவிங்ஸ்டன் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் பால்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நீட் விலக்கு ஏன் வேண்டாம்? எதற்காக எதிர்கிறோம்?  ஏழை, எளிய மாணவ,மாணவிகள்  நீட் தேர்வினால் பாதிப்பு அடை கிறார்கள். தமிழ்நாட்டில் தான் அதிக மாணவ, மாணவியர்கள் மருத்துவம் பயில்கிறார்கள். இதனால் பணம் உள்ளவர்கள்தான் மருத்துவம் பயிலமுடிகிறது. இதனால் தான் இதனை தமிழ்நாடு முழுவதும் எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 

50இலட்சம் கையெழுத்து வாங்கி, நமது கவர்னருக்கு  அனுப்ப வேண்டியது உள்ளது என்று கூறினார். இந்த இயக்கத்தில் பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி கனகராஜ், உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ், உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார், டேவின் சாலமோன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory