» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் வான் நோக்குதல் நிகழ்ச்சி

வியாழன் 2, நவம்பர் 2023 3:08:10 PM (IST)சர்வதேச நிலா நோக்கு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் வான்நோக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வானவியல் மன்ற தலைவர் எழிலன் நிலவு நோக்கு நாள் குறித்து உரையாற்றினார். தமிழ்நாடு வானியல் அறிவியல் மன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு தொலைநோக்கி பற்றியும் நிலவு மற்றும் அதன் மேற்பரப்பு பற்றியும் அடிப்படை கருத்துக்களை எடுத்து கூறினார். 

மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். தொலைநோக்கியில் பார்ப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை ரமா வரவேற்புரை ஆற்றினார். இடைநிலை ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியை அங்காள ஈஸ்வரி செய்திருந்தார். இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆர்.தட்சிணாமூர்த்திNov 3, 2023 - 03:33:17 PM | Posted IP 172.7*****

பயனுள்ள நிகழ்ச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory