» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கருத்தரங்கு!
புதன் 11, அக்டோபர் 2023 5:34:41 PM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது,அவர்களது சாதனைகளை அங்கீகரிப்பதை வலியுறுத்தி ஆண்டு தோறும் ஐ. நா., சார்பில் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவது தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனையொட்டி மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் பெண்கள் அதிகாரமளிக்கும் மையத்தின் சார்பில் பெண்களுக்கு சட்ட உரிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும் இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மகிளா நீதி மன்ற முன்னாள் பப்ளிக் புராசியூட்டர், உறுதிமொழி ஆணையரான வழக்கறிஞர் சுபாஷினி வில்சன் மற்றும் பியரல் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் ஆயிஷா பர்வீன் ஆகியோர் பங்கேற்ற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய சுபாஷினி வில்சன், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டத்தில் பெண்களுக்கான உரிமை குறித்து விரிவாக பேசினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அனைத்து துறை மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் சியாமளா மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் விக்னேஷ் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


