» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 9, அக்டோபர் 2023 9:52:43 AM (IST)நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
      
நாசரேத் திருமறையூரில் உள்ள புனித லூக்கா செவி லியர் கல்லூரில் முதலாம் ஆண்டு இரண்டாவதுபருவ  மாணவ, மாணவிகள் சேர்ந் துநடத்தின முதலுதவிகலை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் இயற்கை பேரழிவு என்ற தலையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவசர முதலுதவி அளிப் பது போல் நடித்து காட்டினர். 

இந்நிகழ்ச்சிக்கு நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி  முன்னாள் முதல்வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.டி.கே. ஜெயசீலன், கல்லுரியின் காளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் மற்றும்  கல்லூரி  முதல்வர் சோபியா செல்வராணி ஆகியோர்கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.கல்லூரியின் முதலாம் ஆண்டு இரண்டா வது பருவ மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம டைந்த மற்றும் கை, கால் இழந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கல்லூரி தாளாளர் டாக்டர்.கமலி ஜெயசீலன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory