» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளி என்.எஸ்.எஸ். நிறைவு விழா

திங்கள் 9, அக்டோபர் 2023 9:49:44 AM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். நிறைவு விழா நடந்தது. 
 
நாசரேத் அருகே உள்ள திருமறையூர் பகுதியில் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடந்தது. முகாமை திருமறையூர் சேகர குரு ஜான் சாமுவேல் ஜெபித்து தொடங்கி வைத்தார். முகாமில் ஒவ்வொரு நாளும் மாணவிகள் திருமறையூர் சுற்றுப் புறங்களை தூய்மைப் படுத்தல்,திருமறையூர் மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளி, செவித்திறள் குறையுடை யோர் பள்ளி. மற்றும் முதியோர் இல்ல த்தில் உள்ளவர்களை சந்தித்து உதவி செய்தல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இலவச கண் மருத்து முகாம், டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

 முகாமின் நிறைவு நாளில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் வயோலா மார்க்கெட் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ( பொறுப்பு) ஜுலியற் ஜெயசீலி முன்னிலை வகித்தார். முகாமில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 200 க்கு மேற்பட்ட வர்கள் பயன் பெற்றனர். 

இதில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ், கிராம சுகாதார செவிலியர்கள் சுப்புலட்சுமி,சுதா, செவிலியர் பொன் இசக்கி, இடை நிலை சுகாதார செவிலியர்கள் அபியா, ராஜேஸ்வரி , ரேவதி, தன்னார்வலர்கள் கலையரசி, சரோஜா,பத்மா, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வயோலா மார்க்கெட்,தலைமை ஆசிரியை ( பொறுப்பு) ஜுலியற் ஜெயசீலி, பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி, உதவி திட்டஅலுவலர் ஏஞ்சலின் பிரியா மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory