» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!

புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது. 

பிள்ளையன்மனை நாசரேத் மர்கா ஷிஸ் கல்லூரியில் சென்னை புத்தாக்க நிறுவன மைய அலுவலக தொழில் முனைவோர் குழு மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜவஹர் சாமுவேல் தலைமை வகித்தார். 

நிதியாளர் பேரா.சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் முன்னிலை வகித்தார். வணிகவியல் பேராசிரியர் ஷைலின் ஆரம்ப ஜெபம் செய்தார். மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் மாணவி இசக்கி பிரியா வரவேற்புரை ஆற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோருக்கான கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் தொடக்க தொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினார் 

இதில் 121 மாணவ, மாணவியர் பங்கு பெற்று பயனடைந்தனர். மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் மாணவி நவிதா நன்றி கூறினார். வணிகவியல் துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் பனங்கிழங்கு விதை நடப்பட்டது. ஏற்பாடுகளை வணிகவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் பாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் நல்லதம்பி, ஞானசுமதி, வணிகவியல் துறைத் தலைவர் சாந்தி சலோமி மற்றும் துறைப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜசிங்  பாராட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory