» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு: மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:20:14 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியில் கல்லூரி செயலர் அருட்சகோதரி சிபானா, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர் அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் JCI Zone பயிற்ச்சியாளர், கௌசல்யா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நுகர்வோராகிய நாம் போலி விளம்பரங்களை அடையாளம் கண்டுகொள்ளும் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் வழியுறுத்தினார். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா(FSSAI), இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்(NCDRC) மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(CCPA) ஆகியவை போலி விளம்பரங்களை அடையாளம் கண்டு தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்துவருகின்றன என்றும் கூறினார்.
இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் டெ.ரதி, தா.பிரியாங்கா மற்றும் பேராசிரியர் தா. மனுவேல் இன்ஃபனி ஆகியோர் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் நுகர்வோர் மன்ற மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் கேள்விகளுக்கு விளக்கம் பெற்றதுடன் சிறப்பு விருந்தினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகள் பெற்று பயனுற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)

குழந்தைகள் தின விழா: தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து அசத்திய மாணவர்கள்
புதன் 15, நவம்பர் 2023 3:17:50 PM (IST)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!
புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)
