» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!

சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)



தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியின் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்றது. 

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்  54 பேர் கொண்ட குழுவுடன் தருவைகுளத்திற்கு சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள், இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர்கள், தத்தெடுக்கப்பட்ட கிராமமான தருவைகுளத்திற்குச் சென்று "உங்கள் தலைமுறையை காப்பாற்ற மரங்களை பாதுகாக்கவும்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். 

கல்லூரி செயலாளர் சி.ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ மற்றும் துணை முதல்வர் சகோதரி குளந்தை தெரேஸ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆதரித்தனர். தருவைகுளம் புனித கேத்தரின் தொடக்கப்பள்ளியில் இந்திய புங்கை மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியை  அருட் சாகோதரி ரெ. ஜி.ஆண்டனி செல்வ வனிதா, உதவி தலைமை ஆசிரியை ஏ.அகஸ்டின் வானதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். 

வருங்கால சந்ததியினரைக் காப்பாற்ற மரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு ஆங்கில துறை மாணவிகள் ஏற்பாடு செய்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் சிறப்புரையாற்றி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory