» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு மகளிர் பள்ளியில் ரூ.1.83 கோடியில் புதுப்பித்தல் பணிகள் பூமிபூஜையுடன் தொடக்கம்!
வியாழன் 21, செப்டம்பர் 2023 3:03:31 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ1.83 கோடி மதிப்பில் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.
தமிழக அரசின் தகை சால் பள்ளி திட்டத்தின் கீழ் 1.83 கோடி மதிப்பில் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுகிறது. தரைதளங்கள், மேல்தளங்கள், ஆய்வு கூடங்கள், வகுப்பறைகள், புதுப்பிக்கபடுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். தமிழக காவல் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கட்டிட புதுப்பித்தல் பணியினை துவக்கி வைத்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உதவி செயற்பொறியாளர் குமரேசன்,இளநிலை பொறியாளர் காட்வின்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,ஒப்பந்தக்காரர் ராஜகோபால்,உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன்,உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


