» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் உலக யோகா தினம்!

புதன் 21, ஜூன் 2023 3:25:40 PM (IST)



பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை 9 டிஎன் சிக்னல் கம்பெனி கமெண்டிங் அலுவலர் லெப்டினான் கர்னல் டிஆடி சின்கா உத்திரவின்படி குரும்பூர் அருகே உள்ள ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. என்.சி.சி. அலுவலர் ராஜகுமார் வரவேற்றார். 

யோகாவின் சிறப்புகளை பற்றி சிறப்பு விருந்தினர் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ் எடுத்து கூறினார். உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் யோகா பயிற்சி அளித்தார். முடிவில் மாணவ மாணவிகளுக்கு சிற்றூண்டி வழங்கப்பட்டது. யோகா பயிற்சியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவ மாணவிகளை பள்ளி செயலாளர் செல்வம் தலைவர் பிரபாகரன், பொருளாளர் விஜயசேகர் ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory