» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் பள்ளியில் சர்வதேச யோகா தினம்!

புதன் 21, ஜூன் 2023 3:21:43 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகாவிற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் உலக யோக தினம் கொண்டாடப்பட்டது. 

பள்ளியின் தலைவர் தங்கமணி தலைமை வகித்து வாழ்த்தி தொடங்கி வைத்தார். பொறுப்பு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி சிறப்புரையாற்றி வாழ்த்தினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கவுதமன், உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி்.சி. திட்ட பொறுப்பு ஆசிரியர் ஜான்ஸ்டானி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயலதா மற்றும் மருந்தாளுனர் பழனிமுத்தம்மாள், பணியாளர் குழந்தைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு என். சி். சி. மாணவ தொண்டர்களுக்கு யோகாசனம், மூச்சுபயிற்சி அளித்தனர். முடிவில் வல்லாரை மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கி பயன்பாடு செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவ தொண்டர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory