» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்வு: பள்ளிக்கல்வித்துறை பெருமிதம்
சனி 17, ஜூன் 2023 10:46:14 AM (IST)
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதியன்று நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அரசுப் பள்ளிகளை சேர்ந்த 12,997 மாணவர்கள் எழுதிய நிலையில் அவர்களில் 3982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இது மொத்த மாணவர்களில் 31 சதவீதமாகும் என்று தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்தநிலையில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட அரசு பள்ளி மாணவர்களால் இயலவில்லை. அதனால் கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகத்தை ஆளும் திமுக அரசு, இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்வது நீட் தேர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறதா? என்ற கேள்வியை கல்வியாளர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


