» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை!
வெள்ளி 16, ஜூன் 2023 4:14:37 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் "ஆளுமை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைத்தலைவர் பி. வில்லியம் தர்மராஜா "தனித்திறன் மேம்பாடு என்ற தலைப்பிலும், தூத்துக்குடி வழக்கறிஞர் சொர்ணலதா "சமூக ஊடகங்களைத் திறன்பட கையாளுதல்” என்ற தலைப்பிலும், பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் பி. பெனிசன் திலகர் கிறிஸ்துதாஸ் "தொழில்துறை திறன்கள்” என்ற தலைப்பிலும், பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ஏ. இரத்தினபிரபு "கணினி வளத்திறன்” என்ற தலைப்பிலும் கருத்தரை வழங்கினர்.
பயிற்சிப் பட்டறையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்வியியல் கல்லூரி பயிலும் 260 மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைத்து மாணவியருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


