» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாலுமாவடியில் காமராஜர் பள்ளி கட்டிடங்கள்: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
வியாழன் 15, ஜூன் 2023 3:03:30 PM (IST)

நாலுமாவடியில் காமராஜர் மழலையர் நர்சரி பள்ளி வகுப்பறைக் கட்டிடங்களை சகோ.மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் காமராஜர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மூலம் காமராஜர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இப்பள்ளிக்கு நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தால் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய வகுப்பறைக் கட்டிடங்களையும், புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்து ஆசி வழங்கினார்.
விழாவிற்கு காமராஜர் மேல்நிலைப்பள்ளி தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் வரவேற்று பேசினார்.பள்ளி செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். தாமஸ் ஜெயபால், பள்ளி முதல்வர் கல்பனா மலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக துணைமுதல்வர் பெர்சியா நன்றி கூறினார். விழாவில் காமராஜர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சிவலிங்கம், ஜின்னா, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுமாவடி இசக்கிமுத்து, அம்மன்புரம் ஞானராஜ், அங்கமங்கலம் பானுப்பிரியா மற்றும் சுதாகர் உட்பட பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


