» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினம்

திங்கள் 5, ஜூன் 2023 4:07:00 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்பு மாணவிகளுக்கு "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்று அடையாள வில்லையை அணிவித்தார். அவர் தம் உரையில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் தற்போது குறைந்து வருவதாகவும் அதை சரிசெய்ய பெண்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதற்காக மரக்கன்றுகள் நட்டு பெண்கல்வி, மகளிர் உரிமையை காக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மாணவி ரானிகா மரங்கள் சுற்றுச் சூழலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி விளக்கி கூறினார். சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் நன்றியுரை ஆற்றினார். பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியர் சங்கரி என்ற ரேவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் துளசி டிரஸ்ட் தனலட்சுமி, பல்வேறு சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆர்.தட்சிணாமூர்த்திJun 5, 2023 - 04:54:34 PM | Posted IP 172.7*****

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory