» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!

சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5சதவீதம் தேர்ச்சி யடைந்துள்ளனர்.
 
நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மொத்தம் 204 மாணவிகள் எழுதினர். இதில் 203 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது 99.5சதவீதம் தேர்ச்சியாகும். இப்பள்ளியில் எழுதிய மாணவி அனுஷ்யா 477 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி செல்வ இசக்கி 475 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி வனிதா 469மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

தேர்வு எழுதிய 8 மாணவிகள் மொத்தம் 450க்கு மேற்பட்ட மதிப்பெண்களும், 27மாணவிகள் 400க்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜுலியட் ஜெயசீலி மற்றும் பள்ளி ஆட்சி மன்ற க்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் பாராட்டினர். 

காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தேர்வு மொத்தம் 121மாணவிகள் எழுதினர். அதில் 117மாணவிகள்; வெற்றி பெற்றுள்ளனர். இது 97 சதவீதம் தேர்ச்சியாகும். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி முகம்மது சுலைமான் நாச்சி 468 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி சகாய சாலு 467 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி மரியம் மசீரா 463 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நல மன்ற தலைவர் அஷரப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நுஜ்ஹா, பள்ளி தலைமை ஆசிரியை ஹெப்சிபா லைட், பள்ளி மேலாண்மை க்குழு தலைவர் ரஜானா மற்றும் அதன் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory