» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி விளையாட்டு விழா!

திங்கள் 8, மே 2023 3:23:30 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூ ரியில்  விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலரும் கல்லூரிகளின் நிலைவரக்குழு செயலருமா ன நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் சிறப்பு விருந்தினராக கல ந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.கல் லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார். 

கல்லூரி முதல்வர்  ஜவஹர் சாமுவேல் வாழ்த் துரை வழங்கினார். விளை யாட்டுத்துறை ஆண்டறிக் கையை உடற்கல்வி இயக் குநர் ராஜாசிங் ரோக்லண்ட் சமர்ப்பித்தார். கல்லூரியில் நடைபெற்ற  ஆண்களுக் கான தனிநபர் சாம்பியன் பிரிவில் ரோசையா பெஞ்ச மின் என்ற மாணவரும், பெண்களுக்கான தனிநபர் சாம்பியன் பிரிவில் அபிஷா ஏஞ்சல் ஸ்வீட்டி மற்றும் அபிஷா ஹெலன் ரூபி ஆகியோர் பெற்றனர். வணிகவியல் துறை மாண வர்களும், கணிதத்துறை மாணவிகளும் ஒட்டுமொத்த சாம்பியனாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். 

பல்கலைக்கழக அளவில் இடம்பிடித்த மாண வ,மாணவியருக்கு ரொக் கப் பரிசு காசோலையாக வழங்கப்பட்டது. கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பி னர்கள் ராஜாசிங் ஹாரிஸ் டன், கிருபாகரன், திலகர், எபி,மர்காஷிஸ் மற்றும் நிதி யாளர் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மார்க்கர் அற்புதராஜ், கல்லூரி உடற் கல்வி இயக்குநர் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory