» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா
சனி 29, ஏப்ரல் 2023 3:30:49 PM (IST)

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி 36 ஆண்டுகள் பணி செய்து பணி நிறைவு பெற்றமையை முன்னிட்டு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க செயலர் ஜெயபாலன் தலைமை வகித்தார், நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் திருக்கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி ஆசிரியைகள் ஜெய ஜீவா, தனலட்சுமி, அருணா, ஜெப அகிலா,சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகக்கனி, எபனேசர் ஜெயா ஆகியோர் பணி நிறைவுபெற்ற ஆசிரியையின் பணிகளை பாராட்டிவாழ்த்தி பேசினர். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சார்பாக பணி நிறைவு பெற்ற ஆசிரியை ராஜேஸ்வரிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பணி நிறைவுபெற்ற ஆசிரியை ராஜேஸ்வரி ஏற்புரை வழங்கினார். விழாவில் பள்ளிக் குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், பள்ளியின் முன்னாள். ஆசிரியர்கள் முத்தையா, முத்துலெட்சுமி, தங்க பேச்சியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆசிரியை சகாய கலாவதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ஆசிரியர் அருள் காந்தராஜ் தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


