» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய திறனாய்வு தேர்வில்வெற்றி : இராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு!

வெள்ளி 28, ஏப்ரல் 2023 3:23:56 PM (IST)மத்திய அரசின் மனித மேம்பாட்டு துறை சார்பில் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒட்டநத்தம் இராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளி மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.

ஆண்டுதோறும் மத்திய அரசின் மனதவள மேம்பாட்டு துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி திட்டத்தின் மூலம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூபாய் ஆயிரம் விதம் 48,000/-ருபாய் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்ட 2022- 2023ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒட்டநத்தம்இராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளி மாணவர் அஸ்வின்குமாரை தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சந்திரா,ஆசிரியர்கள் ரவிக்குமார்,அலமேலு, லட்சுமி பிரியா உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory