» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கெச்சிலாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் : மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

செவ்வாய் 25, ஏப்ரல் 2023 8:18:22 AM (IST)கெச்சிலாபுரம் இந்து நாடார் ஆரம்ப பள்ளியில் புதியவகுப்பறை கட்டிடங்கள், மற்றும் பூங்காவினை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கெச்சிலாபுரம் கிராமத்தில்  இந்து நாடார் உறவின்முறை மற்றும்  கிராம பொதுமக்கள் சார்பாக கட்டப்பட்டுள்ள இந்து நாடார் ஆரம்ப பள்ளி புதிய 5-வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சிறுவர் பூங்காவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, பள்ளி தலைமை ஆசிரியை பாண்டியம்மாள், தலைவர் மாரியப்ப நாடார், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory