» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா

சனி 22, ஏப்ரல் 2023 3:27:50 PM (IST)கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சங்கராகிட்ஸ் வித்யாலயா பள்ளியின் சார்பில் நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மழலை பள்ளி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கேஜியிலிருந்து முதல் வகுப்புக்கு தகுதிபெற்ற மழலை பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்து கௌரவிக்கப்பட்டது.

நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் ஆலோசனையில் பேரில் நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராகிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்றார்.

நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ் சங்க செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலைப்பள்ளி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் பள்ளிக்குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன்,ரவிச்சந்திரன்,மணிக்கொடி, தொழிலதிபர் செல்வம், சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, வசந்தா, அமுதசுந்தரி,நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அருள் காந்தராஜ்,விஜய பொன் ராணி,சகாயகலாவதி, தனலட்சுமி உள்பட பெற்றோர்கள்,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை அனிதாசெல்வி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory