» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

வியாழன் 20, ஏப்ரல் 2023 4:43:24 PM (IST)



கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த 11 மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு  தேசிய அளவிலான வருவாய் வழி திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு         9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம்ரூபாய் 1000/- வீதம் ரூபாய் 48,000/- வழங்கப்படுகிறது. இதில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 11 மாணவமாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நாடார்உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன்,பள்ளிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு கலந்து கொண்டு தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,பள்ளிக் குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, ரவிச்சந்திரன்.பள்ளி முன்னாள் பொருளாளர் செல்வம்,உள்பட ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory