» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை
வெள்ளி 24, மார்ச் 2023 11:56:56 AM (IST)

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு ஏ.பி.சி. மகாலட்சுமி அம்மாள் நினைவு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சி. மகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கல்வி உதவித் தொகையாக மாணவியருக்கு 7.40,700 ரூபாயை வழங்கியது. கல்லூரித் தாளாளர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்புலட்சுமி, முதல்வர் பாலஷண்முகதேவி ஆகியோர் மாணவியருக்கு உதவித் தொகையைப் பெற்றுத் தந்தனர்.
நிகழ்ச்சியில் கணினித்துறைத் தலைவர் ஷியாமலாசூசன் வரவேற்புரையாற்றினார். முதல்வர் பாலஷண்முகதேவி வாழ்த்துரை வழங்கினார். விற்பனை மேலாளர் மோகன் பிரவீணா, ஹைமாஸ்டீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்துஸ்தான் நிறுவனத்தின் மதுரை மண்டல பொதுமேலாளர் செல்ல பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். சுயநிதிப் பிரிவு வணிகவியல்துறை, கணிதத்துறை, இயற்பியல்துறை, கணினி அறிவியல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 118 மாணவியர் கல்வி உதவித்தொகையைப் பெற்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை மாணவியருக்கு வழங்கப்பட்டது. இந்துஸ்தான் நிறுவனத்தைச் சார்ந்த பரமசிவம், கீர்த்தி, சிவகுமார், பிரபாகரன், ஆனந்தகீதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வி உதவித்தொகை வழங்கும் இந்நிகழ்ச்சி குறித்து மாணவியர் பின்னூட்டம் வழங்கினர். மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆசிரியர்களும் ஆசிரியர், அலுவலர். ரேவதி உறுதுணையாக இருந்தனர். வணிகவியல் துறைத் தலைவர் சித்ரா செல்லம் நன்றியுரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


