» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியா்களுக்கு மாா்ச் 15-17 வரை 3 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
புத்தாக்கத் தொழில்முனைவோா் உருவாக்கத் திட்டத்தின் கீழ் சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி -ஆராய்ச்சி நிலைய முதல்வா் ப. அகிலன் தலைமை வகித்தாா். மீன் பான தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியா்- தலைவா் பா. கணேசன், பயிற்சியாளா் ஸ்வரன், கடல்சாா் உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணைத்தின் துணை இயக்குநா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், தொழிலில் வெற்றி காண்பதற்கும் தேவையான வழிமுறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டன. நிறைவு விழாவில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ.சுகுமாா் பங்கேற்று, பயிற்சி பெற்ற உதவி பேராசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ந. கஜாத்குமாா் பேசினாா். முகாமை ஒருங்கிணைத்த தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியா் கணேசன் நன்றி கூறினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!
வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)
