» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

குளத்தூர் டிஎம்எம் டிஎம்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தேர்வு சார்ந்த வினாடி வினா போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டிஎம்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வினாடி வினா மன்றம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போட்டி தேர்வு சார்ந்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. 2ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பிரசன்னா புஷ்பம் வரவேற்று பேசினார்.
கல்லூரி இயக்குனர் கோபால் தலைமை வகித்து மாணவர்கள் தொடர் கல்வியின் மூலம் தங்களது அறிவை பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற போட்டி தேர்வு தொடர்பான வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பேசினாா். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள் பொது அறிவு தொடர்பான நுணுக்கமான அறிவினை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
மாணவர்கள் 12 குழுக்களாக பிரிந்து மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.போட்டியில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் எபனேசா்பிரேம்குமார், கணேசன் ஆகியோர் முதலிடத்தையும்,மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் பாரத் ,ஹரிஸ் ஆகியோர் இரண்டாம் பரிசினையும், கணினி அறிவியல் துறை மாணவர்கள் இந்திரா, சொப்னா ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை பேராசிரியை அழகுமணி ஒருங்கிணைத்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!
வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)
