» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)



நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவிஜி டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீவைகுண்டம் பட்டு கேஸ் ஏஜென்சி சார்பில் பிரதம மந்திரி எல்ஜிபி  சமையல் எரி  வாயு குறித்த  விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவி ஜேஸ்மின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.   பட்டு கேஸ் ஏஜென்சி பொது மேலாளர் -விஜய் ஜேசுதாஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இன்பவல்லி, சுகாதார ஆய்வாளர்  ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர், மயில்ராஜ், எரிவாயு விழிப்புணர்வு பற்றியும்,  மெக்கானிக் அய்யம்பெருமாள்,  எரிவாயு பாதுகாப்பு பற்றி கூறினர்.  பின்னர் வாடிக்கையாளர்ளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.

இதில் கிராம சுகாதார செவிலியர் -சுப்புலட்சுமி, ,அங்கன்வாடி பணியாளர் - பெமினா ,   ஊராட்சி செயலர் அழகுமாரி,  பட்டு கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் ஜெகன், சிவா, முத்து, ஜெபராஜ் , தனசுந்தர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து  எரிவாயு அடுப்பு பழுதுபார்ப்பு முகாம் பிள்ளையன்மனை கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் வைத்து நடந்தது.   பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர் மயில்ராஜ் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory