» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அங்கமங்கலத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு: மோகன் சி லாசரஸ் ஆய்வு

வெள்ளி 10, மார்ச் 2023 10:56:18 AM (IST)அங்கமங்கலம் முஸ்லிம் தெருவில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

குரும்பூர் முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இயேசு விடுக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் பள்ளிக்கு கூடுதல் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மோகன் சி லாசரஸ் பார்வையிட்டார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் சந்திரகாந்தம் வரவேற்றார்.

இதில் ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அங்கமங்கலம் பஞ். தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஜமாத் நிர்வாகிகள் நசீர், பாதுஷா, ஷேக் பைஜூ, அப்பாஸ் மற்றும் குரும்பூர் வெல்பர் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கமங்கலம் முஸ்லிம் தெருவில் கட்டப்பட உள்ள பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மோகன் சி லாசரஸ் பார்வையிட்டு மாணவ மாணவிகளிடம் உரையாடினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory