» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதன் 8, மார்ச் 2023 8:13:43 AM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இணைய வழி வணிகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி நீதிமன்றம்,உறுதிமொழி ஆணையர் மற்றும் சமூக ஆய்வாளர் ச.சொர்ணலதா தலைமை வகித்து பேசுகையில், தரமான பொருட்களை வாங்கும் வழிமுறைகள், குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் குறித்தும், இணையவழி மூலம் பொருட்களை வாங்கும் போது அதை விழிப்புணர்வுடன் வாங்க வேண்டுமென்றும் கூறினார். 

விழாவில் கல்லூரி  செயலர் சிபானா, கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் டெ. ரதி முனைவர். தா.பிரியாங்கா மற்றும் பேராசிரியர். தா. மனுவேல் இன்ஃபனி ஆகியோரும் சிறப்புர செய்தனர். இக்கூட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory