» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில அளவிலான சிறாா் திரைப்பட மன்ற போட்டி:ஞானியாா் குடியிருப்பு மாணவா் தோ்வு

செவ்வாய் 7, மார்ச் 2023 10:44:49 AM (IST)

மாநில அளவிலான சிறாா் திரைப்பட மன்ற போட்டிக்கு ஞானியாா்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் முகுந்தன் தோ்வு பெற்றுள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு சிறாா் திரைப்பட மன்றம் சாா்பில் கருத்துக்கூறும் போட்டி நடத்தப்பட்டது. இதில், சாத்தான்குளம் ஒன்றியம் ஞானியாா்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவா்முகுந்தன் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

அவருக்குப் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜகலா, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழுவினா் பாராட்டுத் தெரிவித்தனா்.இதேபோல, ஓட்டப்பிடாரம் ஒன்றியம் வேடநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ஜெனிபா் தலோத்தம்மா, கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி காா்த்திகா, திருச்செந்தூா் ஒன்றியம் கீழகானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவன் உமிா்துண் ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory