» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செயின்ட் ஜோசப் பள்ளியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 6, மார்ச் 2023 8:19:11 PM (IST)

புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
இவ்விழாவிற்கு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யுகேஜி மழலையர்களுக்கு பட்டமளித்தார். தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் செய்கை நாடகம், நடனம்,இயற்கை குழு நடனம், ஆசிரியர்களின் வாழ்த்துப் பாடல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசியஅளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் அருட் தந்தையர்கள் தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் தந்தை சகாயம், தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜான் பென்சன், அருட்தந்தையர்கள் ஜேம்ஸ் விக்டர், இசிதோர், ஸ்டார்வின், அமலன், பெஞ்சமின், லாரன்ஸ், விஜயன், மரிய தாஸ், ரினோ, அருட்சகோதரி ஜூலியட், மரிய பாக்கியம், அருட் சகோதரர் சேவியர், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தாளாளர் மற்றும் முதல்வர் ரூபர்ட் தலைமையில் நிர்வாக அலுவலர் நிர்மல் ராணி மற்றும் ஆசிரியர்கள், அனைத்து வகைப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
P.S. RajMar 6, 2023 - 10:49:41 PM | Posted IP 162.1*****
மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு எதற்கு பட்டமளிப்பு விழா? இது வீண் ஆடம்பரம். பொது மக்களிடையே தனியார் மற்றும் ஆர்.சி பள்ளிகளுக்கு ஆதரவை தேடும் மறைமுக யுக்தி இது! ஏழை எளிய மக்களும் தனியார் பள்ளிகளை நோக்கி செல்ல இவர்கள் வழிகோணுகிறார்கள். மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



ஓவர் ஆட்டம்Mar 8, 2023 - 08:29:33 PM | Posted IP 162.1*****