» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் விளையாட்டு விழா

வெள்ளி 3, மார்ச் 2023 3:25:45 PM (IST)



காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா 2நாட்கள் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் விளையாட்டு விழா 2நாட்கள் நடந்தது. முதல் நாள் போட்டியை பள்ளி நிர்வாகி அஷரப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாணவ- மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி நடந்தது. காயல்பட்டினம் அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி தாளாளர் புஹாரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் உமாமகேஷ்வரி, உஷாகாந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 2வது நாள் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ஆறுமுகநேரி- இராஜமன்யபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் எமிடெய்சி கிறிஸ்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிப்ட்லின் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அஷரப் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory