» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்
புதன் 1, மார்ச் 2023 3:11:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் விழா நடைபெற்றது.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் என்ற தலைப்பில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரி கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் அவர்கள் அறிவியல் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பள்ளியிலிருந்து வருகை தந்த மாணவ மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்பின் மாதிரியினை தகுந்த விளக்கங்களோடு அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் மாதிரிகளும் அதற்குரிய விளக்கங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 அணிகளாக கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகளில் குளத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் மாதேஷ் குமார், மற்றும் மகேஷ் குமார், முதலிடம் வென்று ரொக்கப் பரிசு ரூபாய் 1500 பெற்றனர். இரண்டாவது இடத்தினை கைப்பற்றிய தரு வைக்குளம் அரசு பள்ளி மாணவி ஸ்டில் மெர்லிங், அவர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கப் பரிசும், மூன்றாம் இடம் பெற்ற தருவைக்குளம் அரசு பள்ளி மாணவி அக்வின் பிரைட்க்கு, ரூபாய் 500 ரொக்க பரிசும் கல்லூரியின் இயக்குனர் கோபால் வழங்கினார்.
மதிப்பெண் அடிப்படையில் 4 முதல் 8 வரை இடங்கள் வரை வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. கண்காட்சியின் இறுதியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன், அறிவியல் தின உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வணிகவியல் துறை பேராசிரியை செல்வி சங்கீதா, அவர்கள் அனைத்து பேராசிரியர்கள் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


