» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கச்சனாவிளை புனித மரியன்னை பள்ளி முன்னாள் மாணவிகள் சங்கமம் நிகழ்ச்சி!

செவ்வாய் 28, பிப்ரவரி 2023 11:02:18 AM (IST)


நாசரேத் அருகிலுள்ள கச்சி னாவிளை புனித மரியன் னைபெண்கள்உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.   
            
கச்சினாவிளை புனித மரியன்னைபெண்கள்உயர் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சங்கமம் 2023 என்ற தலைப்பில் முன்னாள் மாணவிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.இக்கூட்ட த்திற்கு நூற்றுக்கும்மேற்பட் டோர் கலந்து கொண்டு தங் களின் அனுபவங்களை பகி ர்ந்துகொண்டனர்.இப்பள்ளியில் பயின்று  தற்போது கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக  பணிபுரிந்து கொண்டிருக்கி ற அக்சீலியா,மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ ராக பணிபுரிந்து கொண்டி ருக்கும் செல்வி பாசமலர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காங்கிரஸ்மகளிரணி தலை வராகஇருக்கும் சுந்தரி ஆகி யோர் சிறப்பு விருந்தினர்க ளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முன்னாள் மாணவிகளின்ஆலோசனை க்கு ஏற்ப மாணவிகள் சங் கம் என்னும் அமைப்பானது உருவாக்கப்பட்டு அதன் தலைவியாக சுந்தரி, உப தலைவியாக மீனா,செயலா ளராக திருநெல்வேலி மாவ ட்ட நீதிமன்றத்தில்பதிவறை எழுத்தராகபணிபுரியும் கன கசுபா பொருளாளராக  ஸ்ரீ ஜா மற்றும் செல்வி அமுதா , சட்ட ஆலோசகராக செல்வி பாசமலர் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். மாணவி களின்நலனுக்காக தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டது. அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஒவ் வொருவரும் தங்கள் தோழி களை ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டதும் பள்ளிப்பருவத்தின் நினை வுகளை பகிர்ந்து கொண்ட தும் உணர்ச்சி பூர்வமாக அ மைந்திருந்தது.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை சகோதரி விமலா மேரி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory