» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் பள்ளியில் அடுப்பில்லா சமையல் திருவிழா: ஜிகர்தண்டா தயாரித்து அசத்தல்!

வியாழன் 23, பிப்ரவரி 2023 4:37:12 PM (IST)



நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் "அடுப்பில்லா சமையல் திருவிழா”  சார்பாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு வேளாண் அறிவியல் கல்வி மன்றம் சார்பாக  தலைவர் தங்கமணி தலைமையில் "அடுப்பில்லா சமையல் திருவிழா” நடந்தது. தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகச்சாமி, நிர்வாக முதுகலை உயிரியல் ஆசிரியை மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் கல்வி தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் உழவன் பாலபிரபாகர் கலந்து கொண்டு மிக முக்கியமான 13 வகையான அடுப்பில்லா சமையல் உணவு முறைகளான இனிப்பு,கருவேப்பிலை, மல்லி, பால் இல்லாத தயிர் சாதம், அரசாணிக்காய் அல்வா, வெண்டைக்காய் குலோப்ஜாம், புடலங்காய் கட்லட், பீட்ரூட் கீர், இயற்கை ரோஸ் மில்க், நிலக்கடலை பருப்பு லட்டு, வெந்தைய கோவா, அவுல் பாயாசம், எஸ்.ஏ.என்.கற்றாலை ஜிகர்தண்டா ஆகிய உணவுகளை பட்டியல் இட்டு நன்மைகள் கூறி செயல் விளக்க பயிற்சி அளித்தார். 

பயிற்சியின் செயல்விளக்கமாக தொடர்ந்து அடுப்பினை பயன்படுத்தாமல் பல்வேறு  13 வகையான உணவுகளை மாணவர்கள் நேரடியாக தயாரித்து அசத்தி காட்சி படுத்தினர். இதில் கலந்து கொண்ட 6 குழுக்களில் முதல் 3 இடங்கள் தேர்வு செய்து தேர்வு குழுவினர் பாராட்டினர். வேளாண் அறிவியல் 11, 12ஆம் வகுப்பு ஆம் வகுப்பு  மாணவ- மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 12ஆம் வகுப்பு  மாணவர் வேல்முருகன் நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory