» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:06:42 PM (IST)

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் (ஆளுநர் விருது தேர்வு) ராஜ்ஜியபுரஷ்கார் தேர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரையின்படி 3 நாட்கள் புதுக்கோட்டை பி.எஸ்.பி மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. முகாமில் தூத்துக்குடி, திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்துவகை பள்ளிகளிலிருந்தும் சுமார் 250 சாரணர்கள், 160 சாரணியர்களும், 25 பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
தேர்வு முகாமினை மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார் தொடங்கி வைத்து, "மாணவ, மாணவிகளிடம் பெற்றோருக்கு கீழ்படிந்து, ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்க, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்குபெற வேண்டும்" என்று கூறினார். முகாமில் சாரண, சாரணியர்களுக்கு உறுதிமொழி, தேசியகீதம், மதிப்பிடுதல், முதலுதவி, நட்சத்திர குறியீடுகள், திசையறிதல், கூடாரம் அமைத்தல், சாரண சாரணிய கொடியேற்றும் முறை, மரபுக்குறியீடுகள் உள்ளிட்ட செய்முறைத் தேர்வும், எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது.
மாநில பயிற்சியாளர்கள் எபனேசர் சந்திரஹாசன், மு.நாராயணன், ராஜசேகர், மகேஸ்வரி, ஜெயாசண்முகம் ஆகியோர் தேர்வாளர்களாக கலந்து கொண்டனர். முகாகமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாவட்ட ஆணையர்கள் பி.ஜெயசுசிலா, பி.சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் டி.அல்பர்ட் தினேஷ் சாமுவேல், என்.வள்ளியம்மாள், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ஆ.ஜெயாசண்முகம், பொறுப்பாசிரியர்கள் ஜான் சௌந்திரராஜ், ஆறுமுகம், சகாய மேரி வீனஸ், அந்தோணி ஜோஸ்பின் மேரி, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
