» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் இளைஞர்களின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து தேசிய மாணவர் படை,நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், பசுமை படை, நுகர்வோர்மன்றங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்கைகளில் தேசிய கொடி ஏந்தி தூய்மை இந்தியா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலமாக கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பிருந்து துவங்கி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி எட்டையாபுரம் சாலை வழியாக மீண்டும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
விழிப்புணர்வு பேரணிக்கு ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார்.ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் லட்சுமி விக்னேஷ்,அருண்,முரளி கிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜேசிஐ செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மாவட்ட நூலக ஆய்வாளர் (பணி நிறைவு) பூல்பாண்டி,உள்பட ஜேசிஐ உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜேசிஐ பொருளாளர் விஜய் கண்ணன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


