» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.

வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)



வேம்பார் வாலசமுத்திரபுரம் துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் விடுப்பில் உள்ள ஆசிரியையும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றை நிரூபித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் வால சமுத்திரபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா நடந்தது. ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். கிராம தலைவர் சேர்மன் கொடியேற்றினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான பால் சாமி சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளை ஆசிரியைகள் ராஜலட்சுமி சிவகாமி ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.விழாவின் முத்தாய்ப்பாக விடுப்பில் இருந்து வரும் ஆசிரியை சரவணச்செல்வி குடியரசு விழாவில் கலந்து கொண்டு தனது நாட்டுப்பற்றை நிரூபித்து சக ஆசிரியைகள் மாணவர்கள் பொதுமக்களின் பாராட்டை பெற்றார். நடந்த குடியரசு தின நிகழ்வின் நிறைவில் தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory