» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி: அமைச்சர் துவக்கி வைத்தார்!
புதன் 25, ஜனவரி 2023 3:33:19 PM (IST)

தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி கருத்தரங்கினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று (25.01.2023) திறந்து வைத்து பார்வையிட்டு தெரிவித்ததாவது:
தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக தனது சொத்துக்களை இழந்து கப்பல் இயக்கியவர். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 408 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் நிறைய பேரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இங்கே இடம்பெற்றிருக்கின்றது. தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத தியாகிகள் என்ற புத்தகத்தினை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
போட்டி நிறைந்த உலகத்தில் மாணவ, மாணவிகள் அதிகமாக கற்று அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களை மட்டுமல்லாமல் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். மாணவப்பருவத்தில் நன்றாக படித்தால் நீங்கள் போட்டித்தேர்வுகளுக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை. சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றினை நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரிவித்து அவர்களும் அறிந்துகொள்ள செய்ய வேண்டும்.
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள் நீங்கள்தான். நீங்கள் நன்றாக கற்று அறிவாற்றல் மிக்க சமுதாயமாக மாற வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் தலைமை இயக்குநர் மத்திய மக்கள் தொடர்பகம் மா.அண்ணாதுரை, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா
வெள்ளி 31, மார்ச் 2023 3:14:08 PM (IST)

மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டி: 4 மாணவர்கள் தேர்வு
ஞாயிறு 26, மார்ச் 2023 8:33:59 AM (IST)

சாகுபுரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!
சனி 25, மார்ச் 2023 12:15:10 PM (IST)

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை
வெள்ளி 24, மார்ச் 2023 11:56:56 AM (IST)

மாநில அளவிலான பொறியியல் திட்ட கண்காட்சி: நாசரேத் சி.எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள் சாதனை!!
வியாழன் 23, மார்ச் 2023 3:39:08 PM (IST)

காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் ஆண்டு விழா
வியாழன் 23, மார்ச் 2023 11:04:22 AM (IST)
