» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
திறன் போட்டிகளில் நாகலாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை
புதன் 25, ஜனவரி 2023 11:46:38 AM (IST)

திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்கபாத்தில் இயங்கும் "அனைத்திந்திய குடிமக்கள் வளர்ச்சி மையம்" நடத்திய மாணவர் திறன் போட்டிகளில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 52 மாணவ-மாணவியர்கள் பங்கு பெற்று சாதனை படைத்தனர். சாதனை செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாக குழு தலைவர் தங்கமணி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்றார்.
முதுகலை ஆசிரியர் இரவிச்சந்திரன், ஆசிரியைகள் கவிதா மற்றும் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதனை படைத்த 8-ம் வகுப்பு மாணவி தாரணி, சிறந்த கையெழுத்துக்கான "கலா ஸ்ரீ" மெடலையும், 9-ம் வகுப்பு மாணவி நிகிர்தா சிறந்த ஓவியத்திற்கான "கலா ரத்னா" மெடலையும் பெற்ற மாணவியர்கள் பாராட்டு பெற்றனர். தொடர்ந்து பங்கு பெற்ற 52 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பெற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



SURESHKUMARJan 25, 2023 - 12:47:17 PM | Posted IP 162.1*****