» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் திறனறியும் போட்டிகள்
வியாழன் 19, ஜனவரி 2023 5:03:42 PM (IST)

குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டிகள் 2023 நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டிகள் 2023 நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் கோபால் தலைமையேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியை செல்வி பிரதீபா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். வண்ணக் கோலம் இடுதல், பேச்சு போட்டி, ஓவிய போட்டி, தனி நடன போட்டி, வார்த்தைகளை சேர்க்கும் போட்டி, குழு நடன போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவ மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை அன்னலட்சுமி நன்றி உரை வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் மகாலட்சுமி மற்றும் செல்வி பிரீத்தி ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியை செல்வ லட்சுமி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


